India vs China Hockey Final Match Highlights : சீனாவில் உள்ள ஹூலுன்பியர் நகரில் 8வது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா, கொரியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இன்று இந்தியா ஹாக்கி அணி இந்தியாவை சந்தித்தது. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால், கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. சுக்ஜீத் சிங் அடித்த பந்தை, சீனா கோல்கீப்பர் அருமையாக தடுத்து நிறுத்தினார்.
இதனையடுத்து, இரண்டாம் பாதியில், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் கொடுத்த பந்தை, சரியான முறையில் ஜுக்ராஜ் சிங் கோலாக்கினார். இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க, சீன வீரர்கள் கடும் முயற்சி எடுத்தபோதும், இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தால் சீனாவால் கோல் அடுக்க முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவும் சீனாவும் இந்த தொடரின் தொடக்கத்தில் நேருக்கு நேர் மோதியது. அந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.