விளையாட்டு

என்னய்யா இது அநியாயம்! இனி சிக்ஸர் அடித்தால் அவுட்.. வந்தது புது ரூல்ஸ்!

England Cricket Club Funny Rule : இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் வீரர்கள் பந்தை தூரமாக தூக்கி அடிப்பதால் பந்துகள் பக்கத்துக்கு வீடுகளின் கண்ணாடிகளை உடைத்து விடுகிறது. அத்துடன் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் மீது பந்துகள் விழுந்து பலர் காயம் அடைந்து விடுகின்றனர்.

என்னய்யா இது அநியாயம்! இனி சிக்ஸர் அடித்தால் அவுட்.. வந்தது புது ரூல்ஸ்!
New Rules Brought By England Cricket Club

England Cricket Club Funny Rule : உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் மாறி விட்டது. குறிப்பாக இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்றே சொல்லலாம். இந்திய அணி வெற்றி பெற்றால் ரசிகர்கள் அவர்களை கடவுள்போல் கொண்டாடுவார்கள். இந்திய அணி தோல்வி அடைந்து விட்டால் ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதேபோல் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் மூலை, முடுக்கிலும் கிரிக்கெட் பரவி கிடக்கிறது. நமது நாட்டில் எந்த ஒரு கிராமத்துக்கு சென்றாலும் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடுவதை பார்க்க முடியும். அதுவும் கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டில் பல வேடிக்கைகளை நாம் பார்க்க முடியும்.

கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஒன் பிட்ச் அவுட், சிக்ஸர் அடித்தால் அவுட் என்ற வேடிக்கையான விதிமுறைகள் கடைபிடிப்பது உண்டு. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சிலர் அவுட் ஆகாமல் அப்படியே சிலை மாதிரி நிற்பார்கள். இதனால் அவரை அவுட் ஆக்க ஒன் பிட்ச் அவுட் என்ற விதிமுறையை வேடிக்கையாக கடைபிடிப்போம். 

மேலும் பந்துகளை வலுவாக அடித்தால் பக்கத்து வீடுகளுக்கு சென்று விடும். இதன் காரணமாக சிக்ஸர் அடித்தால் அவுட் என்ற கிரிக்கெட் புக்கில் இல்லாத ரூல்ஸும் கிராமங்களில் வேடிக்கையாக பின்பற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட வேடிக்கையான விதிமுறையை ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் கிளப்பில் கொண்டு வந்துள்ளார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 

ஆம்... நம்பித்தான் ஆக வேண்டும். இங்கிலாந்தில் உள்ள 234 ஆண்டுகள் பழமையான சவுத்விக் ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப் இப்படி ஒரு ஆச்சரியமான விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதாவது இந்த கிரிக்கெட் கிளப்பில் சிக்ஸர் அடித்தால் அவுட் என்ற வேடிக்கையான விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் வீரர்கள் பந்தை தூரமாக தூக்கி அடிப்பதால் பந்துகள் பக்கத்துக்கு வீடுகளின் கண்ணாடிகளை உடைத்து விடுகிறது. அத்துடன் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் மீது பந்துகள் விழுந்து பலர் காயம் அடைந்து விடுகின்றனர். இது தொடர்பாக கிரிக்கெட் கிளப் நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனால் வேறு வழியின்றி  'சிக்ஸர் அடித்தால் அவுட்' என்ற விதிமுறையை சவுத்விக் ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப் அமல்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் கொண்டு வந்த விதிமுறைகளின்படி, ஒரு வீரர் தனது முதல் சிக்ஸரை அடித்தால் அவருக்கு நடுவர் எச்சரிக்கை விடுப்பார். ஆனால் அந்த சிக்ஸருக்குரிய ரன் வழங்கப்படாது. தொடர்ந்து 2வது முறையும் அவர் சிக்ஸர் அடித்தால் அவுட் என அறிவிக்கப்படுவார். கிரிக்கெட் விளையாடுபவர்கள் அனைவரும் இமாலய  சிக்ஸர்களை அடிக்கவே விருப்புவார்கள்.

தற்போது புதிய விதிமுறையால் சவுத்விக் ஷோர்ஹாம் கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த கிரிக்கெட் கிளப்பின் வேடிக்கையான விதிமுறையை குறிப்பிட்டு நெட்டின்சன் பல்வேறு மீம்ஸ்களை சமூகவலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர்.