ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில், வெற்றியைத் தொடரும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சொந்த மண்ணில் வலிமை காட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் 27-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன்களான சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசனின் தொடக்கத்தில் ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்த சென்னை அணி, கடந்த இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தி தற்போது வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இந்த உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்த சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
ரசிகர்களின் 'தல' எதிர்பார்ப்பு
இன்றைய போட்டியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பே எம்.எஸ். தோனி தான். கணுக்கால் காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, இன்றைய ஆட்டத்தில் களம் காண்பார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அவர் விளையாடும் பட்சத்தில், அது மைதானத்தில் உள்ள மஞ்சள் படை ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கும். சென்னை அணி நிர்வாகமும் தோனியின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஐதராபாத்தின் சவால் மற்றும் புள்ளிவிவரம்
ஐதராபாத் அணி இந்த சீசனில் ஒரு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், பலமான ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் தற்போது நல்ல நம்பிக்கையுடன் உள்ளது. இதுவரை இவ்விரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் 22 முறை மோதியுள்ளன; இதில் சென்னை 15 முறையும், ஐதராபாத் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிவிவரப்படி சென்னை கை ஓங்கியிருந்தாலும், ஐதராபாத் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்குக் கூடுதல் பலமாகும்.

LIVE 24 X 7