விளையாட்டு

8 ஆண்டுகளுக்கு பிறகு... ஆண் குழந்தைக்கு தந்தையான கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் - நடிகை சாகரிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஃபடேஸின் கான் என பெயரிட்டுள்ளனர்

8 ஆண்டுகளுக்கு பிறகு... ஆண் குழந்தைக்கு தந்தையான கிரிக்கெட் வீரர்!
8 ஆண்டுகளுக்கு பிறகு... ஆண் குழந்தைக்கு தந்தையான கிரிக்கெட் வீரர்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஜாகீர் கான் மற்றும் நடிகை சாகரிகா கட்கே தம்பதியினர் 8 வருடங்களுக்கு பிறகு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணமான நிலையில், தற்போது தங்களது முதல் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜாகிர் கான் மற்றும் சாகரிகா கட்கே இருவரும் சேர்ந்து தங்களது குழந்தைக்கு ஃபடேஸின் கான் என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். ஜாகீர் கான் கடந்த 2000ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்துவீச்சாளராக அறிமுகம் ஆன நிலையில், 2014ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வெல்ல ஜாகீர் கான் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 92 போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல் 200 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 282 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு சாகரிகாவை திருமணம் செய்துகொண்டார்.

ஜாகீர் கான் குழந்தை பிறந்துள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் தம்பதியினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.