வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு எதிர்ப்பது, பொய்ப் பிரசாரம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இந்தப் பணிகள் முறையாக நடைபெற அ.தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மீது குற்றச்சாட்டு
சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுப் பொய்ப் பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முறைத் திருத்தப் பணிகளை நடத்துவது வழக்கமான ஒன்றுதான்.
2002-2004 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பணிகள் நடைபெறவில்லை. அன்றைக்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்-தி.மு.க. அப்போதெல்லாம் எதிர்க்காத தி.மு.க., தற்போது எதிர்க்கிறது. தி.மு.க. இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
அ.தி.மு.க.வின் நிலைப்பாடு
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். எஸ்.ஐ.ஆர். வேண்டாம் என்று தி.மு.க. நீதிமன்றம் சென்றால், நாங்கள் (அ.தி.மு.க.) எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
அனைத்துக் கட்சிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். இந்தப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் தவறு செய்தால் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால் சர்வாதிகாரப் போக்கு எனச் சொல்லலாம்.
கட்சி சார்பில் விழிப்பாக இருந்து வாக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இப்பணிகளை அ.தி.மு.க. வரவேற்கிறது. அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது. அதே நேரத்தில் அவசியமான ஒன்றை அ.தி.மு.க. வரவேற்கும்" என்றார்.

LIVE 24 X 7