அரசியல்

கூட்டணி உறுதியான கையோடு அமித்ஷாவிற்கு ஸ்பெஷல் விருந்தளிக்கும் எடப்பாடி!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி உறுதியான கையோடு அமித்ஷாவிற்கு ஸ்பெஷல் விருந்தளிக்கும் எடப்பாடி!
கூட்டணி உறுதியான கையோடு அமித்ஷாவிற்கு ஸ்பெஷல் விருந்தளிக்கும் எடப்பாடி
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து, ”கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

மேலும், அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விவகாரங்களில் பாஜக பங்கேற்காது. தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம். ஓபிஎஸ், சசிகலா விவகாரம் அதிமுகவின் தனிப்பட்ட விவகாரம் ஆகையால் அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று அமித்ஷா கூறினார்.

விருந்து

இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமித்ஷாவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிமுக-பாஜக கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.