சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்திற்குப் பெயர் பெற்றது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, அப்பகுதியில் ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து சூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் அடிப்படையிலேயே படுகொலை நடந்திருப்பதாக அதிகாரிகள் கருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
26 பேர் உயிரிழப்பு
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் லேசான காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனால் பஹல்காம் பகுதியில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பாதியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். பின்னர் மத்திய அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஒருவரையும் விட மாட்டோம்
இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம். விரைவில் உரத்த, தெளிவான பதில் கொடுப்போம். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.