புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. அதனால் புகைப்பழகத்தை உடனடியாக நிறுத்துங்கள் என அரசாங்கம் வலியுறுத்தி வரும் நிலையில் சளி பிரச்சனைக்காக வந்த சிறுவனை மருத்துவர் புகைப்பிடிக்க செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் குத்தாவுண்ட் (Kuthaund) பகுதியில் உள்ள மத்திய சுகாதார மையத்தில் சுரேஷ் சந்திரா என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுரேஷ் சந்திராவிடம் சளி பிரச்சனையின் காரணமாக ஐந்து வயது சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு சிகரெட்டை கொடுத்து புகைப்பிடிக்கும் படி சுரேஷ் சந்திரா கட்டாயப்படுத்தியுள்ளார்.
மருத்துவர்செயல்
மேலும், சிறுவனுக்கு சிகரெட்டை பற்ற வைத்து கொடுத்ததுடன் புகையை உள்ளிழுத்து வெளியிடும்படியும் தெரிவித்துள்ளார். சிறுவன் அதை எப்படி செய்வது என்று தெரியாமல் முழித்த நிலையில் சிறுவனிடம் இருந்து சிகரெட்டை வாங்கிய மருத்துவர் அதனை செய்து காண்பித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பேசுப்பொருளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஒரு மருத்துவரே இப்படி செய்தால் மக்கள் என்ன செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடவடிக்கை
இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர் சுரேஷ் சந்திராவை பணியிட மாற்றம் செய்த மத்திய அரசின் மருத்துவ நிர்வாகம் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
வீடியோவைரல்
சிறுவனை சுரேஷ் சந்திரா புகைப்பிடிக்க செய்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றதாகவும். இதுதொடர்பான வீடியோ தற்போதுதான் வைரலாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.