தீவிரவாத தாக்குதல்
ஜம்மு- காஷ்மீரின் பைசாரம் பள்ளத்தாக்கில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியில் ஆய்வு செய்தார்.இதனிடையே சவூதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்.பின்னர் அவசரமாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மெளன அஞ்சலி செலுத்திய மோடி
இதைத்தொடர்ந்து விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் பாகிஸ்தான் உடனான வாகா எல்லை மூடப்படும் எனவும், சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்திய ராணுவத்தினர் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இதைத்தொட்ர்ந்து டெல்லியில் நேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம். தீவிரவாதிகளுக்கு தக்கப்பாடம் புகட்டப்படும் என ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.பின்னர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.பின்னர் பேசிய பிரதமர் மோடி, “பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நட்த்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் முழு நாடும் வேதனையில் உள்ளது. இந்த தேச முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளது. காயமடைந்தவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் தனது மகனை இழந்துள்ளார், ஒருவர் தனது சகோதரனை இழந்துள்ளார், மற்றொருவர் தனது வாழ்க்கைத் துணையை இழந்துள்ளார். ஒருவர் பெங்காலி பேசினார், ஒருவர் கன்னடம் பேசினார், ஒருவர் மராத்தி பேசினார், ஒருவர் ஒடியா, ஒருவர் குஜராத்தி, ஒருவர் பீகாரின் மகன்.
நினைத்து பார்க்க முடியாத அளவு தண்டனை
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை, துக்கமும் கோபமும் நிலவுகிறது. தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கும், அதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத தண்டனை கிடைக்கும்" என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.
மேலும், பயங்கரவாத புகலிடத்தில் எஞ்சியிருப்பதை அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 140 கோடி மக்களின் விருப்பம் பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும்" என்று அவர் கூறினார். நான் உலகிற்கு சொல்கிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கும். பூமியின் எல்லை வரை அவர்களைத் துரத்துவோம். பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைக்கப்படாது.
முழு தேசமும் உறுதியாக உள்ளது
பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழு தேசமும் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். இந்த நேரத்தில் எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், அவற்றின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்று அவர் கூறினார்.