ANI செய்தி நிறுவனம் தனது வீடியோக்களின் காட்சிகளை, சுயாதீன யூடியூபர்கள் சில வினாடிகள் பயன்படுத்தினாலும், அவர்களின் சேனலுக்கு காப்பிரைட்ஸ் ஸ்ட்ரைக் வழங்குவதோடு, அதனை நீக்க வேண்டும் என்றால் பல லட்சங்கள் தர வேண்டும் அல்லது எங்களது காட்சிகளை பயன்படுத்த ஒரு வருட காலத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
பிரச்சினை வெடித்தது எப்போது?
யூடியூபர் மோஹக் மங்கல், “சோச் பை மோஹக் மங்கல்" (Soch by Mohak Mangal) என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அரசியல், நடப்பு நிகழ்வுகள், சமூக விழிப்புணர்வு, பொருளாதாரம் மற்றும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதனை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். இவரது சேனலுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான சப்கிரைப்பர்ஸ் (subscribers) உள்ளனர். இந்நிலையில் தான், யூடியூபர் மோஹக் மங்கல் முன்னணி செய்தி நிறுவனமான ANI மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சம்பவம் இணையத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
ஒரு சில வினாடிகளுக்கு 45 லட்சம்:
ANI முதலில், இவர் பதிவிட்ட கொல்கத்தா பாலியல் வன்புணர்வு வழக்கு (Kolkata rape case) தொடர்பான வீடியோவிற்கு காப்பிரைட் ஸ்ட்ரைக் வழங்கியுள்ளது. அந்த வீடியோவின் மொத்த நீளம் 16 நிமிடங்கள். இதில் ANI நிறுவனத்தின் வீடியோ காட்சிகள் 11 வினாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர், 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்து அவர் வெளியிட்ட 38 நிமிட வீடியோவுக்கு இரண்டாவது ஸ்ட்ரைக் வந்துள்ளது. இந்த வீடியோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம்பெற்ற 9 வினாடி காட்சிகள் (ANI நிறுவனத்தின் வீடியோ காட்சிகள்) பயன்படுத்தப்பட்டிருந்தன.
யூடியூப் பதிப்புரிமை விதிகளின் படி, ஒரு யூடியூப் சேனல் கடந்த 90 நாட்களுக்குள் 3 காப்பிரைட் ஸ்ட்ரைக் (three-strike policy) பெற்றால் அந்த சேனல் முற்றிலுமாக தடை செய்யப்படுவதோடு, யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்படும். இந்நிலையில் தான் யூடியூபர் மோஹக் மங்கல், ANI நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, மோஹக் மங்கலின் வீடியோ மீது கோரப்பட்ட பதிப்புரிமை புகாரை ரத்து செய்ய 45-50 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளது ANI தரப்பு. மேலும், ANI தரப்பு வீடியோக்களை ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுவதற்கு 45-50 லட்சம் ரூபாய் செலுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் கூறியுள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் இன்னும் 8 காப்பிரைட்ஸ் ஸ்ட்ரைக் வழங்கப்படும் என கூறியுள்ளது.
ANI vs யூடியூபர்ஸ்:
இதனால் அதிர்ச்சியடைந்த மோஹக் மங்கல், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக தனது யூடியூப் தளத்தில் பேசி காணொளி ஒன்றினை பதிவிட்டார். அப்போது, ANI யூடியூபர் மோஹக் மங்கலிடம் கேட்டது போல பலரிடம் பணம் கேட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. சேனலின் தன்மைக்கு ஏற்ப ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கேட்டுள்ளது ANI. சுயாதீன யூடியூப்பர்கள் சிலர் தங்கள் சேனல் முடக்கப்படாமல் இருக்க முழுத் தொகையையும் செலுத்தி உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சட்டத்தின் ஓட்டைகளும்-ANI தரப்பு வாதமும்:
ANI நிறுவனம் தனது செயலினை நியாயப்படுத்தியுள்ளது. அசல் உள்ளடகத்திற்காக நிறைய முதலீடு செய்வதாகவும், அறிவுசார் சொத்துகளை பாதுகாக்க சட்டப்பூர்வ உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. யூடியூப் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் காப்பிரைட் ஸ்ட்ரைக் வழங்குவதாகவும், மாற்றுகருத்து இருப்பின் சுயாதீன யூடியூபர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், பதிப்புரிமை சட்டம் 1957-பிரிவு 52 (Under Indian law, Section 52 of the Copyright Act, 1957, provides for “fair dealing” ) விமர்சனம், மதிப்பாய்வு,செய்தி அறிக்கை போன்ற நோக்கங்களுக்காக பதிப்புரிமையில் சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு தெளிவான அம்சங்களுடன் இல்லை என சுயாதீன படைப்பாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

மோஹக் மங்கலுக்கு பெருகும் ஆதரவு:
பிரபல சுயாதீன யூடியூபர்களான நிதிஷ் ராஜ்புத் மற்றும் துருவ் ராத்தே உள்ளிட்டோர் மோஹக் மங்கலுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர். ராத்தே ”ANI-யின் செயல்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்" என குறிப்பிட்டுள்ளார். ராஜ்புத் தனது கமெண்டில், “யூடியூப் இந்த விவகாரத்தின் மூலம் சுயாதீன படைப்பாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஒரு சில வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கே, பல லட்சங்கள் கேட்டு மிரட்டுவது ஏற்புடையது அல்ல என நெட்டிசன் தெரிவித்து வருகின்றனர். அரசாங்கம் சரியான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை என்றால், பதிப்புரிமை தொடர்பான விவகாரம் வருங்காலங்களில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.