இந்தியா

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: நாடு திரும்பிய மோடி.. அமைச்சர்களுடன் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: நாடு திரும்பிய மோடி.. அமைச்சர்களுடன் ஆலோசனை
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: நாடு திரும்பிய மோடி.. அமைச்சர்களுடன் ஆலோசனை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். சவுதி அரேபியாவிற்கு மோடி மூன்றாவது முறை சென்றாலும் அங்குள்ள ஜெட்டா நகருக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். ஜெட்டா சென்றடைந்ததும் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மாலை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதையடுத்து, இன்று பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியால் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலினால் அவசர அவசரமாக இந்தியா திரும்பினார். இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் அங்கேயே பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பயங்கரவாத தாக்குதலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை நோக்கி ராணுவ வீரர் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான பட்டியலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.