ஜம்மு-காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
இன்று (ஜூலை 28) மக்களவையிலும், நாளை (ஜூலை 29) மாநிலங்களவையிலும் தலா 16 மணிநேரம் இந்த விவாதம் நடைபெறும். தேசப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான இந்த விவகாரங்களில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் காரசாரமான வாதங்களை முன்வைக்கத் தயாராகி வருவதால், நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத்தொடர்
கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் முழுவதும், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் போன்ற விவகாரங்களால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்தச் சிறப்பு விவாதம் நடைபெறுவதால், இரு அவைகளும் இந்த வாரம் சுமுகமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள்
ஆளுங்கூட்டணி தரப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் விவாதத்தில் முக்கியமாகப் பேசவுள்ளனர். பிரதமர் மோடி இந்த விவாதத்திற்கு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அமைச்சர்கள் மட்டுமன்றி, அனுராக் தாக்குர், சுதான்ஷு திரிவேதி, நிஷிகாந்த் போன்ற முக்கிய எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்க தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் தரப்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தங்கள் வாதங்களை முன்வைப்பார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாகக் கூறி வரும் கருத்துகளை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய அரசின் நிலைப்பாட்டை பல்வேறு நாடுகளுக்கு விளக்கிய அனைத்துக் கட்சிக் குழுக்களில் இடம்பெற்றிருந்த எம்.பி.க்களுக்கும் இந்த விவாதத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படும். இரு அவைகளிலும் விவாதத்திற்கான நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.