இந்தியா

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்...தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை

கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்...தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை
நிபா வைரஸ் குறித்து மருத்துவக்குழுவினர் ஆய்வு
நிபா வைரஸ் தொற்று

கேரளா மாநிலத்தில் மீண்டும் நிபா உறுதி செய்யப்பட்டுள்ளது. மலப்புரத்தின் பெரிந்தல்மன்னாவில் உள்ள வாலாஞ்சேரியைச் சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புனே வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின்போது இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. அந்தப் பெண் பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சுகாதாரத்துறை கண்காணிப்பு

இந்த நிலையில், நிபா அறிகுறிகளைத் தொடர்ந்து கடந்த 2 நாளுக்கு முன்பு பரிசோதனைக்காக ஸ்வாப் அனுப்பப்பட்டது. இதில் அவரின் நோயின் மூல காரணம் தெளிவாகத் தெரியவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், சுகாதாரத்துறை நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் நிபா உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதனால் நிபா வைரஸ் தொற்று வேறு யாருக்கும் உள்ளதா எனவும் கேரள சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. மேலும் கேரள – தமிழ்நாடு எல்லைகளில் முறையாக சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.