உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி மயக்க மருந்து கொடுத்து ஆண் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, கடந்த 25 ஆம் தேதி அதிகாலை, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், இரவுப் பணியில் இருந்த ஆண் செவிலியர் யோகேஷ் பாண்டேவும், ஒரு பெண் பயிற்சி செவிலியரும் பணியில் இருந்துள்ளனர். அதிகாலை 2 மணியளவில், பாண்டே மற்ற நோயாளிகளின் உதவியாளர்கள் அனைவரையும் தீவிர சிகிச்சைப் பிரிவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும், பயிற்சி செவிலியர் பொது வார்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவு ஆளில்லாமல் இருந்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட பாண்டே, அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் மயக்கம் தெளிந்தபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாகத் தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்ததையடுத்து, விரைந்து செயல்பட்ட போலீசார் யோகேஷ் பாண்டேவைக் கைது செய்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவை சுற்றியிருந்த சிசிடிவி கேமராவில் இந்த முழுச் சம்பவமும் பதிவாகியுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் பெண் ஊழியர்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட போதுமான ஆதாரங்களைச் சேகரித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் பாண்டே கைது செய்யப்பட்டார் என்று பல்ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார்.