நாடு முழுவதும் 5% மற்றும் 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்.3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் காரணமாக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
விலை குறையும் பொருட்கள் என்னென்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றின் விவரங்கள்:
பால் மற்றும் உணவுப் பொருட்கள்:
* அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர் (UHT) பால், ஏற்கனவே பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா போன்ற இந்திய ரொட்டி வகைகளுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* பால், வெண்ணெய், நெய், பன்னீர் மற்றும் சீஸ் போன்றவற்றுக்கான வரி 12%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
* மாவு, பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லேட் மற்றும் கோகோ பொருட்கள் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட வரி 12-18%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
* பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களுக்கான வரி 12%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
* சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, இனிப்பு வகைகள், தாவர எண்ணெய், இறைச்சி, மீன் மற்றும் மால்ட் சாறு கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளும் 5% வரிப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
* சர்க்கரை சேர்க்கப்படாத மினரல் வாட்டர் மற்றும் காற்றூட்டப்பட்ட நீருக்கான வரி 18%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மருத்துவம்:
*உரங்கள், விதைகள் மற்றும் பயிர் ஊட்டச்சத்துக்கள் போன்ற விவசாய இடுபொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 12-18%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
* 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இதைப்போல தனிநபர் ஆயுள், சுகாதார காப்பீடு பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பிற அத்தியாவசியப் பொருட்கள்:
* ஃபேன், குளிர்சாதனப் பெட்டிகள், டிவி, மற்றும் 350 சிசி-க்கு குறைவான பைக்குகள் போன்ற மின் சாதனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. காலணிகள் மற்றும் ஆடைகளுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.