இந்தியா

CBSE 10 மற்றும் 12 தேர்வு முடிவுகள்.. SMS மூலம் எளிதில் பார்க்கலாம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10 மற்றும் 12 தேர்வு முடிவுகள்..  SMS மூலம் எளிதில் பார்க்கலாம்!
CBSE 10 மற்றும் 12 தேர்வு முடிவுகளை SMS மூலம் எளிதில் பார்க்கலாம்!
மத்திய கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ ) கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ள 44 லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகளையும் இணையத்தில் வெளியாவது வழக்கமாக இருந்தது. ஆனால், தேர்வு முடிவுகளை எளிதில் பார்க்கும் விதமாக SMS மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்த தேர்வில், சுமார் 44 லட்சம் மாணவர்கள் CBSE வாரியத் தேர்வுகளை எழுதினர்.

2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் தேர்வில் பங்கேற்ற 44 லட்சக்கணக்கான மாணவர்களும், தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவுகள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் என்ற சூழலில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை, குறிப்பாக இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் எளிதில், எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளைப் பார்க்கலாம் என்ற சிறப்பு வசதியை தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் வழக்கமான முறையில், cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. ஆன்லைன் இணையதளங்களுடன் கூடுதலாக, எஸ்எம்எஸ் மூலமாகவும் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த நடவடிக்கை, இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள் முடிவுகளைப் பெற CBSE10 என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் CBSE12 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பும் போது, நமக்கான தேர்வு ரிசல்ட் SMS ஆக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளஊ.

கடந்த ஆண்டு, தேர்வு முடிவு வெளியீட்டு நேரத்தில் ஏற்பட்ட சர்வர் முடங்கியதால், தேர்வு முடிவுகளை உடனக்குடன் பார்க்க முடியவில்லை என்பதாலும், இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று SMS மூலம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த வரவேற்ப்பை கொடுத்துள்ளனர்.