மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற இளம் பெண் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவனை காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை முயற்சி தோல்வி
நரசிங்பூர், சிச்லி இந்திரா காலனியைச் சேர்ந்த பாரதி மேரா (24) என்பவர், தனது மருமகனுடன் சேர்ந்து ஏ.டி.எம். கொள்ளைக்குத் திட்டம் போட்டுள்ளார். இருவரும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு ஸ்கூட்டரில் இரும்புக் கம்பிகள், ஸ்பானர்கள் போன்ற கருவிகளை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் அங்கிருந்த பொருட்களுக்குச் சேதம் விளைவித்துள்ளனர். இதில் சுமார் ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மேலும், ஏ.டி.எம். மையத்தில் இருந்த 3 சி.சி.டி.வி. கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுனில் குமார் மீனா மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சஞ்சீவனி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருவரும் அடையாளம் காணப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர் .
போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "11 ஆம் வகுப்பு படிக்கும் தனது அக்காள் மகனின் பள்ளி கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டான். அதனால், பள்ளி கட்டணத்தை செலுத்த ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைப்பு
மேலும், அந்த பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைத்தனர். மேலும், அந்தச் சிறுவனும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான்.

LIVE 24 X 7