ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுதுவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இச்சம்பவம் கருதப்படுகிறது.
மத்திய அரசு அதிரடி
பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்தில் வெளியேறவும், பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும், பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரேனும் இருந்தால் நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
தாக்குதல் நடந்த பஹல்காம் அமைந்துள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அனைத்துக் கட்சி கூட்டம்
இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.