இந்தியா

தினமும் 7 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினமும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தினமும் 7 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
7 women are sexually assaulted every day
மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆரிப் மசூத் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கேள்வியை முன்வைத்தார். அவரது கேள்விக்கு அரசு அளித்த பதிலில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது மாநிலத்தின் சராசரி நிலவரப்படி, ஒவ்வொரு நாளும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், இந்தக் சமூகங்களைச் சேர்ந்த 558 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 338 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் 1,906 எஸ்சி/எஸ்டி பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட இருவர் தினமும் தங்கள் சொந்த வீடுகளிலேயே வன்முறைக்கு ஆளாகியுள்ளதை குறிப்பிடுகிறது. அத்துடன், 5,983 மானபங்க வழக்குகள் பதிவாகியுள்ளன, அதாவது தினமும் சுமார் ஐந்து எஸ்சி/எஸ்டி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

மொத்தமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்சி/எஸ்டி பெண்களுக்கு எதிராக 44,978 குற்றங்கள் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 38% பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் (16% பட்டியல் சாதியினர், 22% பழங்குடியினர்) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்ற எண்ணிக்கையானது, இந்த விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக ஒரு நாளைக்கு சராசரியாக 41 குற்றங்கள் நடந்துள்ளன என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது