முன்பெல்லாம் பிளவுஸில் எம்பிராய்டரி செய்து அணிந்தவர்கள், இப்போது ‘ஆரி ஒர்க்’ செய்த பிளவுஸ்களையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த வகை பிளவுஸுகளுக்கு இப்போது மவுசு அதிகமாக உள்ளது. எனவே, தான் பார்த்த ஐ.டி வேலையை உதறிவிட்டு, முழுநேர ‘ஆரி ஒர்க் பிஸினஸில்’ கொடிகட்டிப் பறக்கிறார், நவீனா. பொறியியல் பட்டதாரியான இவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடக்கீழையூரைச் சேர்ந்தவர்.
தனது பணிகள் பற்றி நவீனா கூறுகையில், ‘‘சிறுவயது முதலே எனக்கு கலையார்வம் உண்டு. பள்ளிப்படிப்பை முடித்து, பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் படித்து, 2016-ம் ஆண்டு ஐ.டி வேலையில் சேர்ந்தேன். கைநிறைய சம்பளம் கிடைத்தாலும், வேலையில் மனநிறைவு இல்லை. ‘ஏதாவது சுயதொழில் செய்யவேண்டும்’ என்கிற ஆர்வம் இருந்தது. 2018-ம் ஆண்டு என்னுடைய அக்காவுக்குத் திருமணம் நடந்தபோது, அவருக்கும் எனக்கும் ‘ஆரி ஒர்க்’ செய்த பிளவுஸை ஆர்டர் செய்திருந்தோம். எங்கள் ஊரில் ‘ஆரி ஒர்க்’ பற்றி யாருக்கும் தெரியவில்லை. எனவே, சென்னையில்தான் ஆர்டர் செய்து, வாங்கினோம்.
பிளவுஸில் ‘ஆரி ஒர்க்’ செய்வதற்கான விலை அதிகம்தான் என்றாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அக்காவின் திருமணத்தின்போது அவரும் நானும் அணிந்திருந்த பிளவுஸ் பற்றிய பேச்சு அதிகமிருந்தது. அதன்பிறகே ‘ஆரி ஒர்க்’ மீது எனக்கு ஆசை உண்டானது. நான் வசிப்பது கிராமம். ஆனால், மன்னார்குடி டவுனிலும் கூட , பிளவுஸில் ‘ஆரி ஒர்க்’ செய்துத்தர ஆளில்லை. அதுபற்றி பலருக்குத் தெரியவில்லை.
கொரோனா ஊரடங்கில் கற்றல்:
‘ஆரி ஒர்க்’ பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில், 2019-ம் ஆண்டுதான் யூடியூப்பில் தேடிப் பார்த்தேன். அப்போதெல்லாம் அந்த அளவுக்கு ‘ஆரி ஒர்க்’ பற்றிய கட்டுரைகளோ, வீடியோக்களோ கிடையாது. ஆனாலும், தேடித்தேடி பார்த்து கற்றுக்கொண்டேன். 2019 டிசம்பர் மாதத்தில் ஓரளவிற்குக் கற்றுக்கொண்டு, நானாகவே செய்து பார்த்தேன். 2020-ஆம் ஆண்டு கொரோனா ‘லாக் டவுன்’ சமயத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்ய நேர்ந்தது. அப்போது, ‘ஆரி ஒர்க்’ பற்றி முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.
யாருடைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் இல்லாமல் நானே சொந்தமாகச் செய்தேன். என்னுடைய வேலையை விடாமல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து பார்த்தேன். மன்னார்குடியில் உள்ள டெய்லர் ஷாப்களை அணுகினேன்; சிலர், ஆர்டர் கொடுத்தார்கள். டெய்லரிங் வேறு, ஆரி ஒர்க் வேறு. அதனால், முகம் சுளிக்காமல் ஆர்டர் கொடுத்தார்கள்.
இதற்கிடையே மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவர், ‘ஆரி வேலைப்பாடுகள் செய்யத்தெரிந்தவர்கள் தேவை’ என்றார். அவருக்கும் செய்துகொடுத்தேன். இரண்டு, மூன்று பிளவுஸ் செய்ததும், அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தேன். நான் போட்ட ரீல்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் ஆர்டர் கொடுத்தார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல்; வெளி மாநிலம், வெளிநாடு என பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்தன. வெறும் 5 ஆயிரம் ஃபாலோயர்கள் இருக்கும்போதே ஆர்டர்கள் வந்தன. காரணம், வீடியோவில் நான் தெளிவான முறையில் விளக்கியிருந்தது, பலருக்கும் பிடித்துப்போனது. அத்துடன், என்னிடம் ஆர்டர் கொடுப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்ததைவிடவும் நேர்த்தியாக செய்துகொடுத்தேன்.
கைக்கொடுத்த சமூக வலைத்தளம்:
நாள்கள் செல்லச் செல்ல, ‘ஆரி ஒர்க் வகுப்பு எடுக்கமுடியுமா?’ என்று பலரும் கேட்கத் தொடங்கினர். ஆகவே, மன்னார் குடியில் வாடகைக்கு இடம் பார்த்து, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், பயிற்சி வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். பயிற்சி வகுப்புகளில் நான் சொல்லிக் கொடுத்ததை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணினேன். இதைப் பார்த்த பலர், ஆன்லைனில் வகுப்பு எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். முதலில் கோவாவில் இருந்து ஒருவருக்கு வகுப்பு எடுத்தேன். அதன்பிறகு, ஆஃப்லைனை விட்டுவிட்டு ஆன்லைனில் வகுப்பு எடுக்கத் தொடங்கினேன். இதற்காக முன்கூட்டியே வீடியோ எடுத்து, அதை எடிட் செய்து, அப்லோடு செய்தேன். இதெல்லாம் நான் படித்த படிப்பில் நான் கற்றுக்கொண்டது. ஆக, நான் கற்ற கல்வியும் என்னை கைவிடவில்லை!
‘ ஆரி ஒர்க் ’ ப ற் றி , வீட்டிலிருந்தப்படியே கற்றுக்கொள்ள முடியும் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல்; 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் கற்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் கற்றுத்தருவதால், அனைவரும் சுலபமாக கற்றுக்கொள்கிறார்கள். 14 வயது முதல் 68 வயது வரை உள்ள பெண்கள் என்னுடைய பயிற்சி வகுப்பில் பங்கேற்கிறார்கள். ஆர்வமிருந்தால், யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
2 மாத பயிற்சி வகுப்புக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறேன். வெறும் பயிற்சி மட்டுமல்லாமல்; மெட்டீரியலும் சேர்த்துக்கொடுக்கிறேன். கூடியமட்டும் சந்தேகம் வராத அளவுக்கு மிகத்தெளிவாக வீடியோ எடுத்துதான் அப்லோடு செய்கிறேன். பெரும்பாலும், ஆரம்பத்தில் ஒரு வாரம் மட்டுமே சிலருக்கு சந்தேகங்கள் வரும். அதன்பிறகு, நான் சொல்வதை அவர்கள் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். இதுவரை என்னிடம் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்கு ‘ஐஎஸ்ஓ’ பதிவு பெற்ற சான்றிதழ் வழங்குகிறேன். அதனால், பயிற்சி முடித்ததும், அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்க முடியும். அப்படி என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வீட்டிலிருந்தபடியே சுயதொழிலாகச் செய்துவருகிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் கற்றுக்கொண்ட ‘ஆரி ஒர்க்’கில் இப்போது முழுநேரமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன். அதேநேரத்தில், கொரோனாவால் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றார்கள். என்னுடைய அப்பா செய்துவந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொகை அதிகமானது. சில ஆண்டுகளில் எங்கள் சொத்துகளை விற்று, அந்தக் கடனை அடைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ‘ஆரி ஒர்க்’ மூலம் எனக்குக் கிடைத்த தொகை, கடனிலிருந்து மீள உதவியது. அதுமட்டுமல்ல... 2024-ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. அதற்கும்கூட, என்னால் போதுமான அளவு உதவமுடிந்தது. அப்பாவின் ‘கடன் சுமை’யை நானும் முடிந்தவரை தாங்கினேன். ‘ஆரி ஒர்க் பிஸினஸில் இவ்வளவு சம்பாதிக்கமுடியும்’ என்பதில் எனக்கும் என் பெற்றோருக்கும் மகிழ்ச்சி!
திருமணத்துக்கு முன்பு மட்டுமல்லாமல்; இப்போதுவரை என்னுடைய தொழிலுக்கு அப்பா, அம்மா இருவரும் உதவிவருகிறார்கள். இப்போது கணவரும் பல வழிகளில் உதவிவருகிறார். இந்த பிஸினஸை பொருத்தவரை ஒரு பிளவுஸில் ‘ஆரி ஒர்க்’ செய்ய, 1000 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது’’ என்றார், நவீனா.
(இந்த கட்டுரை குமுதம் சிநேகிதி இதழில் வெளியானது.. இதழ்: 17.04.2025)