காலையும் மாலையும் இருமுறை குளிக்கவேண்டும்
கோடைக் காலத்தில் சருமம் தடித்தல், முகமும் சருமமும் கருமை நிறமடைதல் உள்ளிட்ட பிரச்னைகள் இயற்கையாகவே காணப்படும். நம் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்கல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். வெளியே செல்லவேண்டிய அவசியம் நேர்ந்தால், குடை எடுத்துச் செல்லலாம்.
சருமம் உலராமலிருக்க, சோப் போட்டு முகத்தைக் கழுவுவதைக் குறைக்க வேண்டும். ‘ஃபேஸ் வாஷ்’ பயன்படுத்தலாம். நீராகாரம், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ், கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். தர்பூசணி, கிர்ணிப்பழம் உள்ளிட்ட பழங்களும் சாப்பிடவேண்டும்.
முகத்தில்எண்ணெய்பசைக்குறையாமல்பார்த்துக்கொள்ளவும்
இயற்கையான பொருள்களைக் கொண்டு ‘ஹெர்பல் குளியல் பொடி’ தயாரித்து, உபயோகப்படுத்தினால், ‘டிரை ஸ்கின்’ பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கலாம். பாசிப்பயறு, கஸ்தூரி மஞ்சள், காய்ந்த ரோஜா இதழ், உளுந்து இவற்றை வெயிலில் நன்றாக உலர்த்தி, அரைத்துப் பயன்படுத்தலாம். இதனால், முகத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எண்ணெய்ப்பசை தன்மை குறையாமல் பாதுகாக்கலாம். முகமும் பொலிவு பெறும்.
சருமத்தில் ‘மாய்சுரைஸர்’ போட்டுக்கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது, மறக்காமல் ‘சன் ஸ்கிரீன்’ போட்டுக்கொள்ள வேண்டும். ‘சன் கிளாஸ்’ அணிவது மிகவும் நல்லது. முகச்சுருக்கங்கள் வராமலிருக்க, நன்றாகத் தூங்கவேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்கவேண்டும். முகப்பொலிவுக்கு யோகா செய்வதும் அவசியம். அடர்நிற ஆடைகளை தவிர்த்துவிட்டு, வெளிர்நிற உடைகள் அணிவது நல்லது. முக்கியமாக, பருத்தி ஆடைகள் அணிவது மிகவும் நல்லது.
வெளியே போய்விட்டு வரும்பொழுது சருமம் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அதிக நேரமிருந்தால் முகம் tan ஆவதோடு, டல்லாகவும் காணப்படும். இதனை, இயற்கையான முறையில் சரிசெய்யலாம். தயிர், தக்காளி, ஆரஞ்சுபழத்தோல் ஆகியவற்றை நைஸாக அரைத்து, முகத்தில் பூசிவந்தால், கருமை நிறம் மாறும்.‘ஓட்ஸ்’ ஓர் இயற்கையான ஸ்கிரப்பர். சிறிதளவு ஓட்ஸுடன் பாலைக் கலந்து, முகத்தில் தடவி, மென்மையாக ஸ்கிரப் செய்யவேண்டும். பின்னர், முகத்தைக் கழுவிய பிறகு, விட்டமின் ‘ஈ’ ஆயிலை முகத்தில் தடவி, மசாஜ் செய்யவேண்டும்.
பீட்ரூட், கேரட்டை துருவி, மிக்ஸியில் அரைத்து, சாறெடுக்கவும். இதனை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெய்யை தினமும் இரவு, முகத்தில் லேசாகப் பூசிவந்தால், முகச்சுருக்கங்கள் கட்டுக்குள் வரும். முகம் பொலிவு பெறுவதோடு, இயற்கையாகவே எந்தப் பிரச்னையும் சருமத்திற்கு ஏற்படாமலிருக்கும். கோடைக்காலத்தில் வெளியே போய்விட்டு வந்ததும் மிகவும் சோர்வாக உணர்வோம். எனவே, வீட்டிற்கு வந்ததும், உடனடியாக ‘ஐஸ் வாட்டர்’ குடிக்கவே கூடாது. முதலில் நன்றாகக் குளித்துவிட்டு, ‘பழையக் கஞ்சி தண்ணீர்’... அதாவது, ‘நீராகாரம்’ குடிக்கவேண்டும். இது, நம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கெமிக்கல் கலந்த பொருள்களைக் கூடியவரைத் தவிர்ப்பது நல்லது. எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதனால், முகம் பொலிவுபெறும். தேங்காய்ப்பாலை முகத்தில் தடவி, அரை மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, கழுவினால், முகச்சுருக்கம் கட்டுப்படும். முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் அப்ளை செய்தாலும்கூட, சிறப்பான பலன் கிடைக்கும்.
சருமச்சுருக்கங்கள் மறைய, வாரத்தில் 3 முறை விட்டமின் ‘ஈ’ ஆயிலை முகத்தில் தேய்த்து, மசாஜ் செய்துவரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்தில் பூசலாம். இதனால், சருமத்தில் இருக்கும் தொற்றுகள் நீங்குவதோடு, சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். வெள்ளரியை அரைத்து, முகத்தில் அப்ளை செய்யவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். உப்பில்லாத வெண்ணெய்யை தினமுமே முகத்தில் தேய்த்து வந்தால், முகச்சுருக்கம் மறையும். எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.