'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற ஆழமான, உணர்வுபூர்வமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம். இந்நிலையில் அவரது அடுத்த படைப்பான 'பறந்து போ' திரைப்படம், அவரது முந்தைய பாணியிலிருந்து சற்று மாறுபட்டு, ஒரு இசை கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.
இயக்குநர் ராம், மிர்ச்சி சிவாவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே கோலிவுட் திரையுலகம் ஆச்சரியமடைந்தது. 'பறந்து போ' திரைப்படம், 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. பட வெளியீட்டிற்கு முன்னரே சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால், பறந்து போ திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Sunflower — "not a single, not a teaser":
'பறந்து போ' திரைப்படம் வருகிற ஜூலை 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், Sunflower — "not a single, not a teaser" என்கிற பெயரில் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது போல் அமைந்திருக்கும் இந்த ப்ரோமோவின் பின்னணியில் ஒலிக்கும் பாடலை விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். மதன்கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள சூரியகாந்தி ப்ரோமோ கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், தியா, ஜெஸ் ஸ்வீஜன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையைக் கையாள்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவையும், மதி வி.எஸ். படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியையும், குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
ஏழு கடல் ஏழு மலை:
இத்திரைப்படத்தை ஜியோசினிமா/டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரித்துள்ள நிலையில், 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனம் தமிழ்நாட்டில் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராமின் 'பறந்து போ' திரைப்படத்தினை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படமும் திரையில் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது.
'பறந்து போ' திரைப்படம், ஒரு பிடிவாத குணம் கொண்ட பள்ளி மாணவனையும், பொருளாதார ரீதியாக சிரமப்படும் அவனது தந்தையையும் மையமாகக் கொண்டது. நகரின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி, தந்தை-மகன் இருவரும் ஒரு சாலைப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்தப் பயணத்தில், அவர்கள் பல நல்ல மனிதர்களைச் சந்திக்கிறார்கள். இது இருவருக்கும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், உறவை மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. இத்திரைப்படம் குடும்ப உறவுகள், மனிதத் தொடர்புகளின் தாக்கம் போன்றவற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.