சினிமா

GOAT: “ப்ரோமோஷனுக்கு மட்டும் தல” கோட் தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்... இதுதான் பஞ்சாயத்தா?

விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அஜித்தின் ரெஃபரன்ஸ் இருந்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால், தற்போது கோட் தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாக வசைபாடி வருவது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

GOAT: “ப்ரோமோஷனுக்கு மட்டும் தல” கோட் தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்... இதுதான் பஞ்சாயத்தா?
கோட் தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சென்னை: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம், இரு தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதால், கோட் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கோட் தவிர இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். இதுவும் கோட் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்க ஒரு காரணம் எனலம். இந்நிலையில், கோட் படத்தில் அஜித்தின் பெயரை பயன்படுத்திவிட்டு, இப்போது அவரை அவமதித்துவிட்டதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   

அதாவது கோட் படம் ஆரம்பிக்கும் முன்னரே தனக்கு அஜித் வாழ்த்துத் தெரிவித்ததாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். அதேபோல், மங்காத்தாவை விட கோட் 100 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என அஜித் அன்பு கட்டளையிட்டதையும் வெங்கட் பிரபு நினைவு கூறியிருந்தார். இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக கோட்-ல் அஜித்தின் ரெஃபரன்ஸாக மங்காத்தா படத்தின் பிஜிஎம்-ஐ பயன்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு. மேலும், மங்காத்தாவில் அஜித் பேசிய வசனத்தை கோட் படத்தில் விஜய் பேசியதும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்தது. இப்படி படம் முழுக்க அஜித்தை பயன்படுத்தி ப்ரோமோஷன் செய்துவிட்டு இப்போது அவரை பங்கம் செய்வதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.      

அதாவது கோட் படத்துக்கு பயில்வான் ரங்கநாதன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்திருந்தார். இதனை விஜய் ரசிகர் ஒருவர் தனது டிவிட்டரில் ஷேர் செய்து, எப்பவும் அஜித்துக்கு சப்போர்ட்டாக பேசும் பயில்வான் ரங்கநாதன், விஜய்யின் கோட் படத்தை பாராட்டியிருப்பதாக பதிவிட்டிருந்தார். ஆனால், அதனை ரொம்பவே தகாத வார்த்தைகளால் ட்வீட் செய்திருந்தார் அந்த விஜய் ரசிகர். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் ரீ-ட்வீட் செய்துள்ளது தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. கோட் ப்ரோமோஷனுக்கு மட்டும் அஜித் பெயரை பயன்படுத்திவிட்டு, இப்ப இந்த மாதிரி பண்ணலாமா என டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுவும் ‘தரம்கெட்ட ஏஜிஎஸ்’ என ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

மேலும் படிக்க - “மனசிலாயோ மக்களே..” வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பராக்

அதோடு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியையும் கடுமையாக வசைபாடி வருகின்றனர். இதனால் தரம்கெட்ட ஏஜிஎஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அஜித் ரெஃபரன்ஸ் இருந்தது கோட் படத்திற்கு ரொம்பவே ஹைப் கொடுத்திருந்தது. இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடி வந்த நிலையில், தற்போது மீண்டும் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதலை தொடங்கிவிட்டனர். அஜித் குறித்து தவறான வார்த்தையில் ட்வீட் செய்யப்பட்டுள்ளதை, ஏஜிஎஸ் நிறுவனம் ஆதரிக்கிறதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதற்காக அர்ச்சனா கல்பாத்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் ட்வீட் செய்து வருகின்றனர். 

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் கோட் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மரண மாஸ் காட்டி வருகிறது. முதல் நாளில் 126 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்த கோட், இரண்டாவது நாளில் 200 கோடியை கடந்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், முதல் வாரம் முடிவுக்குள்ளாகவே கோட் 500 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு வெளியானதில் விஜய்யின் கோட் தான் 200 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது.