நடிகர் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன் ஆகியோர் நடித்துள்ள 'அதர்ஸ்' திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்வின்போது கதாநாயகி கவுரி கிஷனிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் விவகாரத்தில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பட விழாவில் எழுந்த சர்ச்சைக் கேள்வி
சென்னையில் கடந்த வாரம் நடந்த 'அதர்ஸ்' பட விழாவில், கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம், "பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... அவர் வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்வி குறித்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் கவுரி கிஷன் ஏற்கனவே தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
ஆவேசப்பட்ட கவுரி கிஷன்
இந்தச் சூழலில், நேற்று நடந்த மற்றொரு புரமோஷன் நிகழ்ச்சியில் இந்தக் கேள்வி மீண்டும் கவுரி கிஷனிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆவேசத்துடன், "இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது இயக்குநரின் தேர்வு. நீங்கள் யார் இதைப் பற்றிக் கேள்வி கேட்பதற்கு?" என்று பதிலளித்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய கவுரி கிஷன், "இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னைத் 'டார்கெட்' செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடல் அமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்துக் கதாநாயகனிடம் கேட்கலாமா? இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குஷ்பு ஆதரவு
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைத் துறை குறித்த விமர்சனம்
"பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத் துறையைச் சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி கதாநாயகனிடம் கேட்பது? என்ன ஒரு அவமானம்!" என்று அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கவுரிக்கு கிஷனுக்கு பாராட்டு
"தமது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த கவுரி கிஷனுக்குப் பாராட்டுகள். அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா? மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்," என்று குஷ்பு வலியுறுத்திக் கூறியுள்ளார்.

LIVE 24 X 7