ஜனவரி 24, 2025 அன்று, தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நாயகனாக கருதப்படும் மணிகண்டன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் தான் குடும்பஸ்தன். மணிகண்டனுடன் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். பொருளாதார ரீதியாக நடுத்தர வர்த்தக குடும்பத்தில் நாள்தோறும் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்தது படம் ஹிட் அடித்ததற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்து இதற்கு முன் வெளியான குட் நைட், லவ்வர் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பஸ்தன் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் திரைக்கதை இருந்ததை தொடர்ந்து குடும்பஸ்தன் மூலம் ஹாட்ரிக் வெற்றியினை பதிவு செய்தார் மணிகண்டன்.
5 மொழிகளில் வெளியீடு:
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்களும் அதன் OTT வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் இன்று (மார்ச் 07) ஜீ5 (ZEE 5) ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக, படம் பிப்ரவரி 28 அன்று ஸ்ட்ரீம் செய்யப்படவிருந்தது, ஆனால் இறுதி நேரத்தில் குடும்பஸ்தன் படத்தின் OTT வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள குடும்பஸ்தன் திரைப்படமானது தமிழ், தெலுகு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் பார்க்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பஸ்தன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்:
குடும்பஸ்தன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரனுடன் இணைந்து படத்தின் கதையை எழுதியிருந்தார். இந்த படத்தை சினிமாகரன் பேனரின் கீழ் எஸ் வினோத் குமார் தயாரித்து இருந்தார். வைசாக் இசையமைத்துள்ளார். இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ.25.93 கோடியை வசூலித்து அசத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more:
பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் - அனுராக் காஷ்யப்
தங்கம் கடத்திய விக்ரம் பிரபு பட நடிகை.. சிக்கியது எப்படி..?