பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறுகிறேன் - அனுராக் காஷ்யப்
பாலிவுட் சினிமாவில் எதார்த்தம் இல்லை என்று கூறியுள்ள அனுராக் காஷ்யப், இனி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், விரைவில் மும்பையை காலி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனுராக் காஷ்யப் அறிமுகமானார். பின்னர் விடுதலை 2, லியோ, விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் இவர், பாலிவுட் சினிமாக்களில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநரில் ஒருவர் அனுராக் காஷ்யப் திகழ்ந்து வந்தார்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளிவந்த 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்', 'ராமன் ராகவ்', 'பிளாக் ஃப்ரைடே' ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன. இவரது திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், “பாலிவுட் திரையுலகம் டாக்சிக்காக மாறிவிட்டதாகவும், நான் அவர்களிடம் இருந்து தூரத்தில் விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நடைமுறைக்கும், எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட விஷயங்களை நோக்கியே அவர்கள் நகர்கின்றனர் என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமா இயக்குநர்களை பார்க்கும் பொழுது எனக்கு பொறாமையாக உள்ளது. தென்னிந்திய சினிமாக்களில் உள்ள சூழல்,பாலிவுட் சினிமாவில் இல்லை என்று தெரிவித்துள்ளார். பாலிவுட் திரைப்படங்களை பொறுத்தவரையிலும், 500, 800 கோடி ரூபாய் வசூல் படைக்கும் படங்களை எடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். அழுத்தமான, ஆழமான கதையம்சம் கொண்ட சூழல் இப்போது இல்லை என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்களைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது.
ஒரு படம் உருவாவதற்கு முன்பே, அதை எப்படி வியாபாரமாக்கப் போகிறோம் என சிந்திக்கின்றனர். அதனால் படம் இயக்குவதற்கான மகிழ்ச்சியே காணாமல் போகிறது. இதனால்தான் நான் முற்றிலுமாக பாலிவுட்டில் இருந்து விலகுகிறேன். விரைவில் மும்பையில் இருந்து வெளியேறுகிறேன்.
சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் இருந்துதான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அவர்கள் என் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் தமிழ்நாட்டிலோ அல்லது கேரளாவிலோ பிறந்திருந்தால், என் கரியர் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






