தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் உட்பட பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை துணை நடிகை அமுதா வயது 28. இவர் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் சக்தி பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவருடன் அமுதாவிற்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவர் ஆவடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் சின்னத்திரை நடிகை தொடர்ச்சியாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஹார்பிக் பாத்ரூம் கிளீனரை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
துணை நடிகை உடனடியாக தனது தோழியும் நடிகையுமான கிரணிடம் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில் அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து துணை நடிகை அமுதாவை மீட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தற்போது அமுதாவின் உடல்நலம் தேறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.