சினிமா

Goundamani Wife Death : கவுண்டமணியின் மனைவி மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

Goundamani Wife Death : கவுண்டமணியின் மனைவி மறைவு.. திரையுலகினர் இரங்கல்!
கவுண்டமணியின் மனைவி சாந்தி
Actor Goundamani Wife Shanthi Passes Away :தமிழ் சினிமாவில் 80-ஸ் காலக்கட்டத்தில், தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி, சென்னையில் இன்று காலமானார்.

நடிகர் கவுண்டமணி தான் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். காமெடியன், நடிகன், வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அவர் நடிகர் செந்திலுடன் இணைந்து நடித்த காட்சிகள் இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் கவுண்டமணி 1963-ம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கோயம்புத்தூரை சேர்ந்த நடிகர் கவுண்டமணி திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தார். தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை திரை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வராத கவுண்டமணி சில பேட்டிகளில் மனம் திறந்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு திரைத்துறையில், காலடி எடுத்து வைத்த அவர், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கரகாட்டம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 80-கள் முதல் இன்றைய 2கே கிட்ஸ் வரையிலும், கவுண்டமணி என்றால் தெரியாதவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு கவுண்டமணி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி மனைவி சாந்தியின் மறைவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.