சினிமா

நடிகர் விஷால் குறித்து அவதூறு.. யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு...!

நடிகர் விஷால் குறித்து அவதூறாக பேசியதாக, நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூப் மற்றும் இரண்டு யூடியூப் சேனல்களின் மீது வழக்கு பதிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் குறித்து அவதூறு.. யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு...!
நடிகர் விஷால் குறித்து அவதூறு.. யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு...!

நடிகரும் நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டதாக யூடியூப் சேனல் மீது நடிகர் நாசர் புகார் தெரிவித்துள்ளார்

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து, இந்த படம் 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில் ஏதோ காரணங்களால் படம் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திரைப்படமும் வெளியானது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் சுந்தர் சி, குஷ்பு, நடிகர் விஷால், நடிகைகள் வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விஷால் பேசும் போது அவர் கைகள் நடுங்கின. முகமும் வீக்கமாக இருந்தது. அவர் பேசிய போது வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் Youtuber சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால் மதுபழக்கத்திற்கு  அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக" யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது. யூடியூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய  யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர்  புகார் அளித்தார்.

நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூப்பர் சேகுவேரா மீதும், 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.