சென்னையில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் உட்படத் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்புடைய 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்குக் கடந்த வந்த மின்னஞ்சலால் (இ-மெயில்) பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபலங்கள் வீடுகளுக்கு மிரட்டல்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று அமைச்சர்கள், சேகர்பாபு, அன்பில் மகேஷ், கே.என்.நேரு, பாடகி சின்மயி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரவிகுமார், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா, நடிகை சாக்ஷி அகர்வால், நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் பா.ஜ.க. ஹெச். ராஜாவின் மகள் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் தீவிர சோதனை
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் உடனடியாகப் போலீசார் விரைந்தனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், எந்த இடத்திலும் வெடிகுண்டுகள் அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த மிரட்டல் ஒரு புரளி என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இதுபோன்று மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதால், அவற்றின் பின்னணி மற்றும் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்துச் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7