சினிமா

கேங்ஸ்டர் படங்கள் எடுக்க தேவையான பொருட்கள்: பங்கமாய் கலாய்த்த ப்ளூசட்டை மாறன்

மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ, காப்பிரைட் வாங்காத இளையாராஜா பாடல்கள் மூன்று என தற்போதைய கேங்ஸ்டர் படங்களின் டெம்ப்ளேட்டை மொத்தமாக கலாய்த்துள்ளார் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.

கேங்ஸ்டர் படங்கள் எடுக்க தேவையான பொருட்கள்: பங்கமாய் கலாய்த்த ப்ளூசட்டை மாறன்
blue sattai maran thoughts about gangsters movie
தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். கேங்ஸ்டர் கதையம்சத்தை மையமாக வைத்து தமிழில் உருவாகும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்பினை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது. தமிழ் சினிமாவினை சேர்ந்த இயக்குநர்கள், கேங்ஸ்டர் கதையம்சம் உள்ள படத்தை எவ்வாறு கையாள்கிறார்கள்? என நக்கலாக கிண்டலடித்துள்ளார் பிரபல திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.

தமிழில் வெளியாகும் திரைப்படங்களை நடிகர் மீதான விருப்பு, வெறுப்பு இன்றி விமர்சனம் செய்பவர் ப்ளூசட்டை மாறன். சில நேரம் வரம்பு மீறி விமர்சிப்பதால், ரசிகர்கள், நடிகர்கள், தயாரிப்பாளார்களின் கோபத்திற்கும் உள்ளாகுவர் என்பது தனி கதை. இந்நிலையில், சமீபத்தில் தமிழில் வெளியாகும் கேங்ஸ்டர் திரைப்படங்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பதாக கூறும் வகையில், ப்ளூசட்டை மாறன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், கேங்ஸ்டர் படங்கள் எடுக்க தேவையான பொருட்கள் என அவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள்-

* கொரிய படங்களின் ஹார்ட் டிஸ்க்-‌ 1.
* கண்டெய்னர் லாரி-‌ 5.
* மொக்கையான பழைய‌ ஃபேக்டரி செட்- 1.
* தீபாவளி துப்பாக்கி- ‌50.
* அட்டகத்தி- 30.
* தக்காளி சட்னி- 20 லிட்டர்.
* சரக்கு பாட்டில்- 20. சிகரெட் பாக்கெட்-‌ 20.
* மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ-‌‌ 1.
* டேபிளில் மூக்கை தேய்த்து.. வில்லன்..மோந்து பார்க்க மைதா மாவு‌ 20 கிராம்.
* செஞ்சிரு, போட்டு தள்ளிரு, ஹார்பர்ல இன்னைக்கி நைட் 100 கிலோ சரக்கு வருது போன்ற வசனங்கள்.. 15 பக்கம்.
* காப்பிரைட் வாங்காத இளையராஜா பாடல்கள் 3.
* க்ரீன்மேட் ஸ்டூடியோ-‌ 2.
* வெட்டியாய் இருக்கும் பக்கத்து மாநில நடிகர்கள்- 4.

இவரது ட்வீட் தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் சினிமா ரசிகர்களை ஈர்த்துள்ளது. கமெண்டில் கூட பல பயனர்கள், இதையும் சேர்த்துக் கொள்ளுங்க என புது லிஸ்ட்டினை ப்ளூசட்டை மாறனுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள். ஒரு பயனர், ”குறிப்பாக மெயின் வில்லனுக்கு மொபைல் போன் ஆபரேட் பண்ண தெரியக்கூடாது. எப்போதும் கூட இருப்பவனிடம் அவனுக்கு போனே போடு, இவனுக்கு போனே போடு என்று கத்திகொண்டே இருப்பான்” என தெரிவித்துள்ளார்.

இன்னும் சில பயனர்கள்,”வில்லனுக்கு அட்வைஸ் கொடுப்பதற்கு கூடவே ஒரு ரிட்டையர்டு நடிகர், வில்லன்கள் பயன்படுத்த விலையுயர்ந்த கார்கள், வில்லனுக்கு கவரிங் நகை 5 கிலோ” என ப்ளூசட்டை மாறனுக்கு இணையாக கேங்ஸ்டர் படங்களை அவரது பதிவின் கீழ் விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த பதிவானது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.