Actor Suriya 45th Film Director Atlee : சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அவரது தம்பி கார்த்தியும் கேமியோவாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கங்குவா முடிந்ததும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் கமிட்டானார். இப்படத்தின் ஷூட்டிங் அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. முன்னதாக சூர்யாவின் பிறந்தநாள் தினத்தில் ஸ்பெஷலாக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டது படக்குழு.
இந்நிலையில், சூர்யாவின் 45வது படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் கடந்தாண்டு வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. ஜவான் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியான அட்லீ, முதல் படத்திலேயே ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுத்து மெர்சல் காட்டினார். இதனால் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் டாப் ஹீரோக்கள் லைனில் நிற்கின்றனர். அதன்படி அவரும் சல்மான் கான், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க அட்லீ கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படியான சூழலில் தான் சூர்யா – அட்லீ கூட்டணி குறித்து புதிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன. சூர்யா ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கவிருந்த புறநானூறு படத்தில் இருந்து வெளியேறினார். இன்னொரு பக்கம் இந்தாண்டு இறுதிக்குள் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதேபோல், இயக்குநர் ஷங்கருடன் சூர்யா இணையவுள்ளதாகவும், இக்கூட்டணியில் வேள்பாரி நாவல் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி கார்த்தியின் விருமன் பட விழாவில் சூர்யாவும் இயக்குநர் ஷங்கரும் மறைமுகமாகவே பேசியிருந்தனர். சமீபத்தில் இந்தியன் 2 ப்ரோமோஷனில் கூட வேள்பாரி நாவலை படமாக எடுக்கவிருப்பதாகவும், அதற்கு ஹீரோ மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்றும் ஷங்கர் கூறியிருந்தார். சூர்யாவின் கால்ஷீட்டுக்காக தான் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இப்படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததோடு, நெட்டிசன்களும் பங்கமாக ட்ரோல் செய்திருந்தனர். இதனால் உஷாரான சூர்யா தற்போதைக்கு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க - ராயன் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
மேலும், சூர்யாவுக்கு அட்லீயின் மேக்கிங் பிடித்துவிட்டதால், சூர்யா 45 படத்தில் அவருடன் இணைய க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சூர்யா – அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.