சினிமா

Raayan Trailer: “பேய் மாதிரி வருவான்... இறங்கி செய்வான்..” வெளியானது தனுஷின் ராயன் ட்ரெய்லர்

Actor Dhanush Raayan Movie Trailer Released : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமான ராயன் வரும் 26ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Raayan Trailer: “பேய் மாதிரி வருவான்... இறங்கி செய்வான்..” வெளியானது தனுஷின் ராயன் ட்ரெய்லர்
Actor Dhanush Raayan Movie Trailer Released

சென்னை : தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன்(Raayan) இந்த மாதம் 26ம் தேதி வெளியாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ்(Dhanush) இயக்கியுள்ள இரண்டாவது படமாக ராயன் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் என பெரும் நட்சத்திர கூட்டணியே இப்படத்தில் இணைந்துள்ளது. அதேபோல், வடசென்னையை பின்னணியாக வைத்து பக்கா கேங்ஸ்டர் ஜானரில் ராயன் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியான ராயன் ட்ரெய்லர்(Actor Dhanush Raayan Movie Trailer), ரசிகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கொடுத்துள்ளது. “காட்டுலயே ஆபத்தான மிருகம் எதுன்னு தெரியுமா” எனத் தொடங்கும் இந்த ட்ரெய்லர், இறுதி வரையிலும் ரத்தம் தெறிக்க தெறிக்க மிரட்டலாக உருவாகியுள்ளது. அதேபோல், தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் என மூன்று லீடிங் கேரக்டர்களுக்கு மட்டுமே வசனம் உள்ளதும் கவனிக்க வைத்துள்ளது. பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரின் கேரக்டர்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

முக்கியமாக ஏஆர் ரஹ்மானின்(AR Rahman) பின்னணி இசை ராயன் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரில் தெரிகிறது. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ஒரு படத்துக்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சினிமோட்டோகிராபியும் ராயன் படத்துக்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ராயன் படத்துக்கு ரசிகர்களிடம் தாறுமாறான எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது ட்ரெய்லரும் வெளியாகி ராயன் மீதான ஹைப்பை எகிற வைத்துள்ளது.

ராயன் படத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மூவரும் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளது மட்டுமே தற்போது வெளியான ட்ரெய்லரில் உறுதியாகியுள்ளது. ட்ரெய்லரின் இறுதியில் பாட்ஷா பட ஸ்டைலில் தனுஷ் வைத்துள்ள ஒரு பஞ்ச் டயலாக், கூஸ்பம்ஸ் மொமண்டாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. இதனால் இந்த மாதம் பாக்ஸ் ஆபிஸில் ராயன் தான் கிங் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.