தென்காசி மாவட்டம் நகர பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா வருகின்ற 7-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் நிறைவு பெறவில்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தென்காசியைச் சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நடைபெறுமா? நடைபெறாதா? என தென்காசி பகுதியைச் சேர்ந்த மக்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இன்று யாகசாலை பூஜைகள் தொடங்கவுள்ள நிலையில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர். குறிப்பாக, கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகம்
காசி விஸ்வநாதர் ஆலயம்: குழப்பத்தில் இருக்கும் கும்பாபிஷேகம்.. விமர்சையாக நடைபெற்ற பூஜை
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.