புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமைந்துள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் மற்றும் நாடு செலுத்துதல் எனும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடத்தப்படும். இதில் பொன்னமராவதி, ஆலவயல், செவலூர், செம்பூதி ஆகிய ஊர்களில் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ராட்சச ஈட்டி, கம்பு உள்ளிட்ட பொருட்களுடன் பக்தர்கள் உடல் முழுவதும் சேறு, சகதி பூசி கொண்டு கோலாட்டம் அடித்து நூதன முறையில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அங்குள்ள குளத்தில் புனித நீராடி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். இவ்விழாவினை காண தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.
ஆன்மிகம்
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் நேர்த்தி கடன்
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.