குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் இடம்பெறும் ஆன்மிக கேள்வி-பதில் பகுதியில் நீலகிரி மாவட்டத்தினை சார்ந்த ரம்யா சுரேஷ் என்பவர் கோயில்களில் இரவில் தங்கிப் பிரார்த்தனைச் செய்வது சிறப்பானதா? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, கே.குமாரசிவாச்சாரியார் வழங்கிய பதிலின் விவரம் பின்வருமாறு-
"ஆலயங்களுக்குப் பகலில் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்பதற்காகவே ஆறுகால பூஜை விதிகளை 'சிவகாம விதிகள்' எடுத்துச் சொல்கின்றன.
உஷத்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தஜாமம் என்ற பூஜை வேளைகள் நிறைவுற்ற பிறகு உற்சவ மூர்த்தி வடிவங்களாக உள்ள சுவாமி அம்பாள் விக்ரஹங்களைப் பள்ளியறை மெட்டுப் பாடி,'எம்பெருமானே. தாலே... தாலேலோ!’ என்று இசைத்து, நாதஸ்வர வித்வான்களும் இதை ராகமாக உறங்கும் பண்பாடி கதவை அடைத்துவிடுகின்றனர்.
கோயில் கதவுகனை மூடிவிட, கிழக்கு சனி மூலையில் உள்ள காலபைரவர் காலடியில் சாவிக்கொத்தை வைத்துவிட்டு, வெளியே வந்துவிடுவதே முறை. பெருமாள் கோயிலிலும் இந்த விதியே கடைப்பிடிக்கப்படுகிறது. மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து ஆலய பட்டரோ, அர்ச்சகரோ அந்தச் சாவிக்கொத்தை எடுத்து, சன்னதிகளைத் திறந்து ஓதுவார்கள். திருப்பள்ளியெழுச்சி பாடி, கதவைத் திறக்க வேண்டும். இரவு 10 மணி முதல், அதிகாலை 5:30 மணி வரை கோயிலுக்குள் யாரும் உட்காரவோ, உறங்கவோ கூடாது.
கடந்த 20 ஆண்டுகளுக்குள் வந்த பழக்கம்தான். கோயில்களில் இரவு தங்குவது. கஷ்டம் தீர இதுவொரு பரிகாரம் என ஜோதிடர்கள் பலரும் சொல்லிவிடுகிறார்கள். புகழ்பெற்ற அம்மன் தலங்களில் வெளியே பிராகாரம் அருகே கூடாரம் கட்டியும் பக்தர்களைத் தங்கவைக்கின்றனர். இது. பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல” என குமார சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.