National Award Winner 2022 : 7 தேசிய விருதுகள்… சாதனையை தக்க வைத்த AR ரஹ்மான்... 2வது இடத்தில் இளையராஜா!

AR Rahman Awards Record in National Award Winner 2022 : இசைமைப்பாளராக 7-வது முறை தேசிய விருது வென்றுள்ளார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். இதன்மூலம் அதிக தேசிய விருதுகள் வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துள்ளார்.

Aug 16, 2024 - 23:28
Aug 17, 2024 - 15:21
 0
National Award Winner 2022 : 7 தேசிய விருதுகள்… சாதனையை தக்க வைத்த AR ரஹ்மான்... 2வது இடத்தில் இளையராஜா!
அதிக தேசிய விருதுகளை வென்ற ஏஆர் ரஹ்மான்

AR Rahman Awards Record in National Award Winner 2022 : 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 4 விருதுகளையும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. பொன்னியின் செல்வன் 1, சிறந்த தமிழ்ப் படமாக தேர்வாகியுள்ளது. அதேபோல் பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மான்(AR Rahman), ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ண மூர்த்தியும் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர். 

முக்கியமாக தற்போது அறிவிக்கப்பட்ட விருதுடன் சேர்த்து இதுவரை 7 தேசிய விருதுகளை தனதாக்கியுள்ளார் ஏஆர் ரஹ்மான்(AR Rahman). இதன் மூலம் இந்தியாவில் இசையமைப்பாளராக அதிக தேசிய விருதுகளை(Most National Awards Winner) வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மானுக்கு, முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது. இந்த விருது கிடைக்க அவரது இசை திறன் முக்கியமானதாக இருந்தாலும், இன்னொரு காரணம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா. 

அதாவது, அப்போதையை தேசிய விருது கமிட்டியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தவர் பாலுமகேந்திரா. இவர்  இளையராஜாவின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. கமலின் தேவர் மகன் பட இசையும் தேசிய விருதுகளுக்கான போட்டியில் முன்னிலையில் இருந்தது. அவருக்குப் போட்டியாக ரோஜா படத்தின் இசைக்காக ஏஆர் ரஹ்மான்(AR Rahman) களத்தில் இருந்தார். இருவருமே சமமான வாக்குகள் வாங்கியதால் யாருக்கு விருது அறிவிப்பது என்பதில் இழுபறி நீடித்துள்ளது. அப்போது, ராஜாவுக்கு ஈடு கொடுத்து நம்மூரில் இருந்து ஒரு சின்னப் பையன் வந்திருக்கானே என, தேர்வுக் குழு தலைவருக்காக இருந்த எக்ஸ்ட்ரா வாக்கை, ஏஆர் ரஹ்மானுக்கு செலுத்தியுள்ளார் பாலுமகேந்திரா.

அப்படியாக தனது முதல் தேசிய விருதை(AR Rahman First National Award) வென்ற இசைப்புயல், தற்போது சர்வதேச அளவில் ஆஸ்கர் மேடை வரை மாஸ் காட்டி வருகிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம், இளையராஜாவிடம் 500 படங்களுக்கு மேல் உதவியாளராக வேலை பார்த்துள்ளார் ஏஆர் ரஹ்மான். குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற சொல்லுக்கு சரியான பொருத்தம் என்றால் அது ஏஆர் ரஹ்மான் தான். ஒருகட்டத்தில் தேசிய விருதுப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் – இளையராஜா இருவருமே தலா 5 விருதுகளுடன் சமனில் இருந்தனர். 

மேலும் படிக்க - தேசிய விருதுகளால் நனைந்த பொன்னியின் செல்வன் 1

2015ம் ஆண்டு வரை இளையராஜா தான் 5 தேசிய விருதுகள் வாங்கி முன்னிலையில் இருந்தார். ஆனால் 2017ம் ஆண்டு தமிழில் காற்று வெளியிடை படத்தின் பாடல்களுக்கும், இந்தியில் வெளியான MOM என்ற படத்தின் பின்னணி இசைக்கும் என ஒரே ஆண்டில் தேசிய விருதுகளை வென்றார் ஏஆர் ரஹ்மான். அப்போது முதல் ஏஆர் ரஹ்மான் 6 விருதுகளுடன் முதல் இடத்திலும், இளையராஜா 5 விருதுகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது வென்று தனது சாதனையை தக்க வைத்துக் கொண்டார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.

அதன்படி, ஏஆர் ரஹ்மான்(AR Rahman) 7, இளையராஜா 5 தேசிய விருதுகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். அடுத்ததாக இந்தி இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் 4 விருதுகளும், ஜெய்தேவ் 3 விருதுகளும் பெற்று மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளனர். அதேபோல், மணிரத்னம் – ஏஆர் ரஹ்மான் கூட்டணிக்கு இது 4வது தேசிய விருது. ஏஆர் ரஹ்மான் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகளில் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow