வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து
டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி. துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை நேரில் சந்தித்து டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இல் பாஜக, 22இல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்களை திடீரென்று நீக்கியுள்ளனர் இந்த நீக்கமே தேர்தல் தோல்விக்கு பிரதான காரணமாக நாங்கள் கருதுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு பாஜக டெல்லியில் இந்த வெற்றியை பெற்றுள்ளது குற்றமே நிரூபிக்கப்படாத ஒரு குற்றச்சாட்டில் தொடர்ந்து கெஜ்ரிவாலை பாஜகவினர் குற்றவாளி என பொய் பரப்புரை மேற்கொண்டனர்
2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்துவதற்கான வாய்ப்பு ஆம் ஆத்மிக் கட்சிக்கு டெல்லி தேர்தல் தோல்வி மூலம் கிடைத்துள்ளதாக கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மிக் கட்சி பந்து போல் நாங்கள் திருப்பி எழுவோம் இந்த தோல்வியினால் நாங்கள் துவண்டு விடவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் இடம் கூட ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்திருக்காது.
இந்த தோல்வியின் மூலம் தேர்தல் வெற்றிக்காக பாஜக எப்படி எல்லாம் எங்களை நசுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதை புரிந்து கொண்டோம் இதை ஒரு பாடமாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
What's Your Reaction?






