AR Rahman Award : ஏ. ஆர். ரஹ்மானுக்கு விருது..? இது ரொம்ப அவமானம்… தேர்வு குழுவை விளாசிய பிரபலஇயக்குநர்!
Aadujeevitham Director Blessy About Kerala State Award 2024 to AR Rahman : பொன்னியின்செல்வன் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கேரள மாநில திரைப்பட விருது விழாவில் ஏஆர் ரஹ்மான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக,ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி கடும் அதிருப்தியில் உள்ளார்.
Aadujeevitham Director Blessy About Kerala State Award 2024 to AR Rahman : 2022ம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆக.16) அறிவிக்கப்பட்டன. அதில், தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 4 விருதுகளை வென்றது. முக்கியமாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது வென்றார். இது அவருக்கு 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு சீயான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம், கேரள மாநில திரைப்பட விருதுகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. 54வது கேரள மாநில திரைப்பட விருதான இதில், 160 பிரிவுகளில் விருது வென்றவர்களின் பட்டியலை அம்மாநில கலாச்சத்துறை அமைச்சர் சாஜி செரியன் வெளியிட்டார். இதில் அதிகபட்சமாக பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் 9 விருதுகளை தட்டித் தூக்கியது. சவுதி அரேபியாவில் பிழைப்புத் தேடிச் சென்ற நஜீப் என்பவர், ஆடு மேய்க்கும் வேலை பார்க்க நிர்பந்திக்கப்படுகிறார். மிக மோசமான அடிமை வாழ்க்கை வாழ்ந்த அவர், அங்கிருந்து இந்தியா தப்பி வருவது தான் ஆடுஜீவிதம் கதை.
உண்மையாக நடந்த இச்சம்பவத்தை, பென்யாமின் ஆடுஜீவிதம் என்ற நாவலாக எழுந்தியிருந்தார். அதனை பிருத்விராஜ் நடிப்பில் திரைப்படமாக இயக்கினார் பிளெஸ்ஸி. சுமார் 10 ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த இத்திரைப்படம் கடந்த மர்ச் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தனது உடலை வருத்தி பிருத்விராஜ் மிக தத்ரூபமாக நடித்திருந்தார். பாலைவனத்தில் நஜீப் என்னவெல்லாம் கஷ்டப்பட்டாரோ..? அதனை அப்படியே திரையில் தனது நடிப்பால் பிரதிபலித்திருந்தார் பிருத்விராஜ். அவரின் நடிப்பு தனது இசையால் உயிர் கொடுத்திருந்தார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.
ஆடுஜீவிதம் படத்துக்கு ஏஆர் ரஹ்மானின் இசை தான் பொருத்தமாக இருக்கும் என படக்குழு ரொம்பவே விரும்பி அவரை கமிட் செய்தது. அதனை தனது இசையால் நியாயப்படுத்தியிருந்தார் ஏஆர் ரஹ்மான். ‘பெரியோனே ரஹ்மானே’ பாடல் முதல் பின்னணி இசை வரை ஒவ்வொரு காட்சியிலும் ரஹ்மானின் இசை ரசிகர்களின் மனதை ஊடுருவியது. அதுவும் இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம். ஆனால், கேரள மாநில திரைப்பட விருது அறிவிப்பில், ஆடுஜீவிதம் படத்துக்கு இசையமைத்த ஏஆர் ரஹ்மான் தேர்வாகவில்லை.
சிறந்த நடிகர் - பிரித்விராஜ் சுகுமாரன், சிறந்த இயக்குநர் – ப்ளெஸ்ஸி, சிறந்த பிரபலமான திரைப்படம் – ஆடுஜீவிதம், சிறந்த நடிகர் (நடுவர் குழு தேர்வு) - கே.ஆர்.கோகுல், சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி, சிறந்த கலரிஸ்ட் - வைஷால் சிவ கனேஷ், சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரசூல் பூக்குட்டி, ஷரத் மோகன், சிறந்த திரைக்கதை தழுவல் – பிளெஸ்ஸி, சிறந்த ஒளிப்பதிவு - சுனில் கே எஸ் என ஒன்பது பிரிவுகளில் ஆடுஜீவிதம் படத்துக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதில் ஏஆர் ரஹ்மான் தேர்வாகவில்லை. இதனை ஆடுஜீவிதம் இயக்குநர் பிளெஸ்ஸி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க - சாதனையை தக்க வைத்த AR ரஹ்மான்... 2வது இடத்தில் இளையராஜா!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஆடுஜீவிதம் படத்தின் ஆன்மாவாக இருந்தது ஏஆர் ரஹ்மானின் இசை தான். முழு ஸ்கிரிப்டை உருவாக்குவதில் இசைதான் மிக முக்கியமானதாக இருந்த்து. இந்தப் படத்திற்கு இசை முக்கியம் என்பதால் தான் ஏஆர் ரஹ்மானை கமிட் செய்தோம். இந்தப் படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டினார். ஆரம்பத்தில் ஒரு பின்னணி இசையமைத்திருந்தாலும், பின்னர் படத்திற்காக அவர் நிறைய மெனக்கெடல்கள் செய்து மெருகேற்றிக் கொண்டே இருந்தார். அப்படி ஆடுஜீவிதம் படத்தின் ஆன்மாவாக இருந்த ஏஆர் ரஹ்மான் இந்த விருதுகளுக்கு பரிசீலிக்கப்படாததை நான் அவமானமாக நினைக்கிறேன்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிளெஸ்ஸியின் இந்த கருத்தை மலையாள சினிமா ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். ஆடுஜீவிதம் படத்துக்கு ஜீவனாக அமைந்ததே ஏஆர் ரஹ்மானின் இசை தான். அதனால் அவருக்கு கண்டிப்பாக விருது கொடுத்திருக்க வேண்டும் என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?