HBD Chennai: சென்னை வாசிகளின் கலாச்சார பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும் பேசும் மவுண்ட் ரோடு தர்காவின் கதை

சென்னையின் அடையாளங்களில் ஒன்று அண்ணாசாலை. இந்த பகுதியில் இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமிய வழிப்பாட்டு தளங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் ’தர்கா-இ-ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதரி’ தர்கா. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த தர்கா உருவான கதை என்ன என்பதை சென்னை தின சிறப்பு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..

Aug 22, 2024 - 14:31
 0
HBD Chennai: சென்னை வாசிகளின் கலாச்சார பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும்  பேசும் மவுண்ட் ரோடு தர்காவின் கதை

சென்னையின் அடையாளங்களில் ஒன்று அண்ணாசாலை. இந்த பகுதியில் இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமிய வழிப்பாட்டு தளங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் ’தர்கா-இ-ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதரி’ தர்கா. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த தர்கா உருவான கதை என்ன என்பதை சென்னை தின சிறப்பு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.. 

மவுண்ட் ரோடு வளர்ச்சி ஆங்கிலேயர்கள் ஆண்டுக்கொண்டிருந்த 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. 1781ல் இருந்து 1785 வரை மெட்ராஸ் கவர்னராக ஜார்ஜ் மெகார்ட்னி
இருந்த காலத்தில் பரிமாண வளர்ச்சி பெற்று முக்கிய பகுதியாக உருவானது. இன்று மறைமலை அடிகள் பாலம் என்று அழைக்கப்படும் மர்மலாங் பாலத்தின் கட்டுமானம் 1724ல் மவுண்ட் ரோட்டின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது. ஸ்பென்சர் பிளாசா, காஸ்மோபாலிட்டன் கிளப், தி ஜிம்கானா கிளப் என பல ஐகானிக் கட்டடங்கள் இப்பகுதியில் கட்டப்பட்டன. காலப்போக்கில், இப்பகுதிக்கு நவாப்கள் வந்து குடியேறத்தொடங்கினர்.  

அப்படித்தான் 17ம் நூற்றாண்டில் ஈராக்கின் பாக்தாத்தில் இருந்து ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதரி பாக்தாதி மெட்ராசுக்கு வந்து குடியேறினார். அவரை கடவுள் அனுப்பிய தூதராக பார்த்த மெட்ராஸ் வாசிகள் அவரிடம் இங்கேயே தங்க நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. பல நோய்களை குணமடைய செய்யும் ஏதோ ஒரு வகையான சக்தி அவரிடம் இருப்பதாக மக்கள் நம்பினர். மேலும் அவரை பார்க்க அந்த காலத்திலேயே ஏராளமானோர் வந்தவண்ணம் இருந்தனர். ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த வீட்டருகே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது. பின்னாலில் அது தர்காவாக மாறியது. ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதரி என்ற பெயரையும் பெற்றது. 

எல்.ஐ.சி கட்டடத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த தர்கா மீது இன்றும் அதீத நம்பிக்கையும், பக்தியையும் வைத்திருக்கின்றனர் சென்னை மக்கள். 2004ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சென்னையே வெள்ளக்காடான போது, இந்த தர்காவில் ஏற்றப்பட்ட சுடர் மட்டும் அணையாமல் எரிந்துக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அங்கு பரம்பரை பரம்பரையாக பணியாற்றி வரும் இமாம் குடும்பத்தினர். சென்னையிலேயே மிக பிரபலமான இந்த தர்கா நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இடமாக இருக்கிறது.

மேலும் படிக்க: வெளியானது தவெக-வின் உறுதிமொழி .. இடம்பெற்றுள்ள முக்கிய வார்த்தைகள்

மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட சென்னையில் வசிக்கும் பிரபலமானவர்கள் இந்த தர்காவில் வழிபடுவது வழக்கம். 1969-ல் அண்ணாசாலையென மவுண்ட் ரோடு பெயர்பெற்றாலும், அங்கிருந்த இந்த தர்கா மட்டும் மவுண்ட் ரோடு தர்கா என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறது. பல மாற்றங்களை பெற்ற அண்ணாசாலையில், 17ம் நூற்றாண்டில் இருந்து மாறாமல் இருக்கும் இந்த மவுண்ட் ரோடு தர்கா சென்னை மக்கள் கொண்டிருக்கும் கலாச்சார பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும் பற்றி பேசும்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow