22 ஆண்டு கால கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த அமைச்சர்...நெகிழ்ந்து போன மக்கள்
தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூரில் 22 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்த அமைச்சரின் செயலுக்கு நெகிழ்ச்சியோடு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெரம்பலூரில் சின்ன வெண்மணி கிராமத்திற்கு புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும்,
செட்டிகுளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு இரண்டு புதிய நகர பேருந்து சேவைகளையும், அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை சிவசங்கர் கலந்து கொண்டு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சின்ன வெண்மணி கிராமத்தில் மக்களின் குறிப்பாக பெண்களின் 22 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி உள்ளதாகவும், தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது இந்த புதிய பேருந்து சேவையால் பயன் அடைந்துள்ளதாக பொதுமக்கள் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






