10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு
ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 காவல்துறை அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த மூர்த்தி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார். நெல்லையில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தையடுத்து இந்த மாற்றம் நடந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கிறது.இதே போல, நெல்லை நகர காவல் ஆணையராக இருக்கும் சந்தோஷ் ஹிதிமானிக்கு நெல்லை சரக டிஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Read more: ஆசிரியர்கள் பணியிடங்கள்.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக இருந்த சக்திவேல் சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும், காவல் நலன் பிரிவு துணை ஆணையர் மெக்னிலான் சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு உத்தரவு
சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் ஹரி கிரன் பிரசாத் காவலர் நலன் துணை ஆணையராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் கார்த்திக் மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் சிபிசிஐடி எஸ்பியாகவும், திருப்பூர் வடக்கு துணை ஆணையர் சுஜிதா ஈரோடு காவல் மாவட்ட எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?






