தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

Mar 20, 2025 - 16:15
Mar 20, 2025 - 16:48
 0
தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

ஒசூர் அருகே தர்பூசணிகள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க நிறமூட்டிகளை ஊசி மூலம் செலுத்தியது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தர்பூசணி பழங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தர்பூசணி பழங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read more: லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்!

பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் தர்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து, ஒசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன், தளி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் தேன்கனிக்கோட்டை காவல்நிலையம் முன்பாக டன் கணக்கில் தர்பூசணி பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்ட 3 கடைகளில் ஆய்வு செய்தனர்.அப்போது, 2 தர்பூசணி பழக்கடையில்   தர்பூசணிகளுக்கு ஊசி மூலம் ரசாயன நிறைமூட்டிகளை செலுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் அபாயம் 

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “பொதுவாக மக்கள் தர்பூசணி பழங்களை நிறத்தை வைத்துதான் வாங்க ஆர்வம் காட்டுவதால், வியாபரத்திற்காக வியாபாரிகள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எரித்ரோசின், PONCEAU 4R பவுடர் ஆகியவற்றை ஊசி மூலம் செலுத்தி உள்ளனர். இவை தலைவலி, காய்ச்சலை மட்டுமல்லாமல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கும். பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர்.

Read more: பாம்பு பிடிக்க போன வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மேலும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து நிறமூட்டி தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து அவற்றை அழிப்பதுடன் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டோர், ஈடுபடுவோர் மீது  உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow