Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 21-09-2024
இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.
கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு என்றும், இதனால் நான் வேதனையில் இருப்பதாகவும் அவரது மனைவி ஆர்த்தி பதில் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், தனது விவகாரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜெயம் ரவி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட வருவாய் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தூத்துக்குடி ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
பிரபுதேவா, சன்னி லியோன், வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம், வரும் 27ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் இயக்குநர் பேரரசு பேசியது வைரலாகி வருகிறது.