K U M U D A M   N E W S

வீட்டு லோன், கார் லோன் வாங்கியவர்கள் நிம்மதி.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன குட் நியூஸ்!

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி தொடர்வதாக தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Liquor Sale: இனி ஃபார்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை.. அனுமதி வழங்கிய அரசு!

''நள்ளிரவு 1 மணி வரை ஃபார்கள், ஃபப்களை திறக்க வைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மது குடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது வெட்கக்கேடானது'' என்று சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Chennai Rain: அதிகாலையில் சென்னையை குளிர்வித்த மழை.. இன்று எங்கெங்கு மழை பெய்யும்?

வெயிலுக்கு பெயர்போன வேலூரில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் எடப்பாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டிலும் மழை கொட்டியது.

Vinesh Phogat: மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு.. வலிமை இழந்து விட்டதாக உருக்கம்!

வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.

Vinesh Phogat: ஒரே இரவில் 1.9 கிலோ எடை குறைத்த வினேஷ் போகத்.. மருத்துவமனையில் அனுமதி!

வினேஷ் போகத் தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் தகவல்கள் கூறுகின்றன.

“திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது” - டிடிவி தினகரன் ஆவேசம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக முடக்கிவருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Manu Bhaker: மக்களின் அன்பு மழையில் நனைந்த மனு பாக்கர்.. சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு!

மனு பாக்கர் வந்த ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக டெல்லிக்கு வந்தது. ஆனால் இதையும் பொருட்படுத்தாமல், லேசாக தூறிய மழைக்கு மத்தியிலும் விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள் இரட்டை பதக்க மங்கைக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் அரசு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

''முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்.. யார் இவர்? முழு விவரம்!

83 வயதான முகமது யூனிஸ் தொழில் அதிபராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் 'கிராமீன் வங்கி'யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Magalir Urimai Thogai Scheme : இந்த 2 திட்டங்களால் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

CM Stalin on Magalir Urimai Thogai Scheme in Tamil Nadu : ''தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டக்குழு பரிந்துரை, ஆலோசனைகள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.