K U M U D A M   N E W S
Promotional Banner

ரயில் பயணம் குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் அறிவுரை!

எக்மோர் டாக்டர் அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளியில், எக்மோர் ரயில்வே பாதுகாப்பு படையால் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. ரயிலில் பயணம் செய்வது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை!

சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.