K U M U D A M   N E W S

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.