TNSTC Special Bus Announcement : பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மகாளய அம்மாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக போலீஸார் தரப்பில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sri Lanka vs New Zealand Test Match : 35 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை விளையாடியது. திமுத் கருணாரத்னே (83 ரன்), தினேஷ் சண்டிமால் (61 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (50 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் அந்த அணி 309 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.