நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.