மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!
மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.